ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (23:59 IST)

ஒரே விமானத்தில் டெல்லியில் இருந்து வந்த இரண்டு தமிழர்களின் உடல்

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவகல்லூரியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த தமிழக மாணவர் சரத்பிரபு மற்றும் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலால் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரா் சுரேஷ் ஆகிய இருவரின் உடல்களும் இன்று சிறப்பு விமானத்தில் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தது

கோவை விமான நிலையத்தில் இருந்து சரத்பிரபுவின் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் என்ற கிராமத்திற்கும் சரத்பிரபுவின் உடலும், ராணுவ வீரர் சுரேஷின் உடல் அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டி என்ற கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது

முன்னதாக ஒரே விமானத்தில் வந்த இரண்டு உடல்களுக்கும் கோவை மாவட்ட பொறுப்பு ஆட்சியா் அஞ்சலி செலுத்தினார்.. மேலும் இருவரது உடல்களும் அவரவா் சொந்த ஊா்களுக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் தயாராக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.