திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (12:30 IST)

பாதியில் வெளியேறிய ஹீரோயின் - அப்செட்டில் இருந்த அருண் விஜய்க்கு ஜாக்பாட்!

அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் என வியப்பில் ஆழ்த்தும் நட்சத்திர கூட்டம் இணைந்திருக்கும் “அக்னி சிறகுகள்” திரைப்படம், இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பிகுரிய படமாக இருக்கிறது. மேலும், இப்படத்தில் ரெய்மா சென், பிரகாஷ் ராஜ், ஜே எஸ் கே ஆகியோருடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசையமைக்க, K A பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் மட்டுமன்றி படம்பிடிக்கப்படும் வித்திசயாசமான லொகேஷன்களாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.  “அக்னி சிறகுகள்”  திரில்லர் அனுபவத்தை  உலகத்தரத்தில் தரும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உச்சபட்ச ஆச்சர்யமாக கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட  இந்தியாவின் முதல் படம் எனும்  பெருமையை “அக்னி சிறகுகள்” பெற்றுள்ளது. கண்களுக்கு விருந்தளிக்கும் பிரமாண்ட விஷுவல்களும்,  அசரவைக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை வியப்பிலாழ்த்தும் பெரு விருந்து காத்திருக்கிறது.

இப்படத்தை குறித்த தகவல் ஒன்று கிடைத்தது. ஆம், இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடித்து ஷாலினி பாண்டே தான். ஆனால், பாலிவுட்டில் ரன்பீர் கபூர் படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் நைசாக நழுவிக்கொண்ட ஷாலினி பாண்டேவால் படக்குழு அப்செட் ஆகியுள்ளனர். ஆனால், தற்போது அவரது கதாபாத்திரத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசன் கமிட்டாகி ரீஷூட் நடந்து வருகிறதாம். இது படக்குழுவை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.