1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:54 IST)

அருண்விஜய்யின் வித்தியாசமான கெட்டப் எந்த படத்திற்கு?

அருண்விஜய்யின் வித்தியாசமான கெட்டப் எந்த படத்திற்கு?
தமிழ் சினிமாவின் வாரிசு நடிகராக இருந்தாலும் நடிகர் அருண் விஜய் பல ஆண்டு போராட்டத்துக்குப் பின்னரே தற்போது தனக்கென ஒரு இடத்தை கோலிவுட்டில் பெற்றுள்ளார்
 
இந்த நிலையில் அவர் தற்போது ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒன்று ’சினம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஜிகே குமாரவேலன் என்பவர் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஷபீர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது 
 
இந்த நிலையில் இன்று முதல் ’சினம்’ படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அருண் விஜய் தனது பகுதிக்கான டப்பிங் பணியை இன்று தொடங்கி உள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் இந்த பணியை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
‘சினம்’ படத்தின் டப்பிங்கை அருண்விஜய் பேசிய புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்தப் படங்களில் அவர் பெரிய மீசையுடன் வித்தியாசமான காட்சி அளிக்கிறார். எந்த படத்திற்கு இந்த கெட்டப் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்