1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:23 IST)

அருண்விஜய்யின் ‘சினம்’ ரன்னிங் டைம்: 2 மணி நேரத்திற்கும் குறைவா?

sinam
சமீபத்தில் வெளியான விக்ரம் நடித்த கோப்ரா  திரைப்படம் உள்பட பல திரைப்படங்கள் 3 மணி நேரம் ரன்னிங் டைம் ஆக இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் சினம் திரை படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் கூட இல்லை என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
அருண் விஜய்யின் ‘சினம் திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது
 
சினம் திரைப் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் கூட இல்லை என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் அதிரடி சஸ்பென்ஸ் படத்திற்கான சரியான ரன்னிங் டைம் இதுதான் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் ஷபீர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக பாலக் லால்வானி நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர், வெங்கடேஷ், பாரதி உள்பட பலர் நடித்துள்ளனர்.