வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (11:49 IST)

கேஜிஎஃபை விட அதிகம்..! பொன்னியின் செல்வன் ரன்னிங் டைம் இவ்வளவா?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரன்னிங் டைம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், விக்ரம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சரித்திர படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்களான “பொன்னி நதி” மற்றும் “சோழா சோழா” ஆகியவை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 6ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் மொத்த ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி படம் மொத்தமாக 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2ம் பாகத்தின் ரன்னிங் டைமை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.