1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (06:59 IST)

அருண்விஜய் மகளுக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து

கடந்த 1995ஆம் ஆண்டு ’முறை மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அருண்விஜய்.  2015ஆம் ஆண்டு அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படம் வெற்றியை அடுத்து அவருக்கு ’குற்றம் 23’ ’தடம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார்.
 
இந்த நிலையில் அருண்விஜய் தனது மகள் பூர்வாவின் 13 வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து அருண் விஜய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 
 
அந்த பதிவில் என் இளவரசிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். பூர்வி, ஒவ்வொரு நாளும் நீங்கள் எங்கள் வாழ்க்கையில் அற்புதமான ஒன்றாக இருக்கின்றீர்கள். நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. மீண்டும் ஒரு அருமையான வருடம் உங்களுக்கு அமையும். எப்போதும் போல் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் எளிமையானவராகவும் சிரித்து கொண்டே இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.