செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (14:16 IST)

மகளுக்கு கால் அமுக்கி விடும் எம்.எஸ் பாஸ்கர் - பாசத்தை ஷேர் செய்த மகள்!

பின்னணிக் குரல் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த எம் எஸ் பாஸ்கர் பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்றார். 
 
இப்போது திரையுலகின் முன்னணிக் கலைஞராக இருக்கும் பாஸ்கரின் மகன் ஆதித்யா 96 படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். இவரது மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக இருக்கிறார். இவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. 
 
இந்நிலையில் புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்பா தனக்கு கால் அமுக்கி விட்டு, அம்மா சோறு ஊட்டி பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.