முரட்டு சிங்கிள்களே… உங்களுக்காகவே காதலர் தின ஸ்பெஷல் தோசை!

சார்க்கோல் தோசை
Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (08:04 IST)
சார்க்கோல் தோசை

சென்னை அடையார் ஆனந்த பவன் ஹோட்டலில் காதலர் தினத்தை முன்னிட்டு சிங்கிள் பசங்களுக்காக சார்க்கோல் தோசை எனப்படும் கருப்பு தோசை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காதலர் தினம் வருவதை முன்னிட்டு காதலர்கள் வழக்கம் போல தங்கள் காதலை வெளிப்படுத்தும்
கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதைப் போல தங்கள் காதலை வெளிப்படுத்த ஆள் கிடைக்காத ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை தங்களை சிங்கிள்ஸ் மற்றும் முரட்டு சிங்கிள்ஸ் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக காதலர் தின எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டு சென்னையில் உள்ள அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் தோசை ஒன்றை உருவாக்கியுள்ளது.

சார்க்கோல் தோசை என அழைக்கப்படும் இந்த தோசையில் கரித்தூள்களைக் கலந்து கருப்பு வண்ணத்தில் தோசையை சுட்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த தோசைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :