வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (13:56 IST)

விஜய் சேதுபதி படத்தை வாங்கிய அருண் பாண்டியன்

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் தியேட்டர் உரிமையை வாங்கியுள்ளார் அருண் பாண்டியன்.
 


‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘ஜுங்கா’ படத்தை இயக்குகிறார். லண்டனில் வாழும் ஸ்டைலிஷ் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.அவருக்கு ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா நடிக்கிறார். வெளிநாட்டிலேயே பிறந்து, வளர்ந்த பெண்ணாக அவர் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் என்பதால், விஜய் சேதுபதியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் தொடங்கும் முன்பே, படத்தின் தியேட்டர் உரிமையை வாங்கியிருக்கிறார் நடிகரும், அரசியல்வாதியுமான அருண் பாண்டியன். அவருடைய ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் இதை வாங்கியுள்ளது. அடுத்த மாத இறுதிவரை லண்டனில் படப்பிடிப்பு நடக்கிறது. அதன்பின் சென்னையில் தொடங்குகிறது.