1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 மே 2023 (21:14 IST)

அருள்நிதியின் ‘’கழுவேத்தி மூர்க்கன் ‘’பட டீசர் ரிலீஸ்

kazhuvethi muurkan
அருள்நிதி நடிக்கும் கழுவேத்தி மூர்க்கன் பட டீசர் இன்று வெளியாகியுள்ளது
.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருள்நிதி. இவர், வம்சம், மெளனகுரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருவின் குரல். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், அருள்நிதி தற்போது நடித்து வரும் படம் கழுவேத்தி மூர்க்கன். இப்படத்தை ராட்சசி படத்தை இயக்கிய சை கவுதமராஜன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில், ஹீரோயினாக துஷாரா நடிக்கிறார்.சாயாதேவி, பிரதாப் சாயா , முனிஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் நிலையில், டி.இமான் இசையமைக்கிறார். இனந்த நிலையில். இப்படத்தின் டீசர் இன்று  வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.