செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (13:56 IST)

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தமிழ் நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதில், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தமிழ் நாட்டில்   ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

மேலும், ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழைபெய்யும் என்றும், 25 ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

சென்னையை மற்றும் அதன் புற நகர்ப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளளது.