1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 22 ஜூலை 2021 (19:39 IST)

அருள் நிதியின் ''டேஜாவு'' 2வது லுக் போஸ்டர் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அருள்நிதி. இவர் நடிப்பில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ள டேஜாவு படத்தின் 2 வது லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாது சினம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி பாணியை கொண்டவர் நடிகர் அருள்நிதி.

சமீபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி தற்போது அவர் நடித்து வரும் “டி ப்ளாக்” படத்தின் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் அருள் நிதி நடிப்பில் உருவாகிவரும் மற்றொரு படம் டேஜாவு. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று தேஜாவு படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகிறது.

தேஜாவு படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கிவருகிறார். இப்படத்தை விஜய் பாண்டி என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைகிறார்.  வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கவும் அருள்நிதியின் இப்படமுன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது