வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (00:04 IST)

விஜய்யின் ’பீஸ்ட் ‘ பட 2 வது லுக் போஸ்டர் ரிலீஸ்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் 2 வது லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த நிலையில் இன்று விஜயின் பிறந்த நாளை அடுத்து தளபதி 65 திரைப்படத்தில் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் ரிலீஸ்  ஆனது.

இன்று மாலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் ‘பீஸ்ட்’ என்று அறிவித்துள்ளது. இந்த டைட்டில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று 12 மணிக்குத்தான் விஜய்யின் பீஸ்ட் படத்தின் உண்மையான சம்பவம் உள்ளது என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதில்,  இது இன்னும் முடியல இனிமேல்தான் ஆரம்பமே எனக் கூறியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே #sunpictures மற்றும்   #vijaysecondlookposter  என்ற பெயரில் ஹேஸ்டேக் வைரலாகிறது.

தற்போது விஜயின் பீஸ்ட் பட இரண்டாவது லுக் போஸ்டர் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் விடிய இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவார்கள் என தெரிகிறது.