1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (19:21 IST)

தனது பிறந்த நாளில் மகனுக்கு பெயர் வைத்த நடிகர் யோகிபாபு!

தனது பிறந்த நாளில் மகனுக்கு பெயர் வைத்த நடிகர் யோகிபாபு!
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் யோகி பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று யோகிபாபு தனது பிறந்தநாளை மட்டும் கொண்டாடவில்லை என்றும் அவர் தனது மகனின் பெயர் வைப்பு விழாவையும் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. யோகி பாபுவின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது என்பதும் அதன் பின்னர் அவர் திட்டமிட்டபடி வரவேற்பு மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மகனின் பெயர் வைப்பு விழாவை இன்று அவர் சிறப்பாக தனது வீட்டில் கொண்ட நடத்தியுள்ளார். யோகிபாபுவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இந்த பெயர் வைப்பு விழா நடந்தது. யோகி பாபு தனது மகனுக்கு விசாகன் என்று பெயர் வைத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.