திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (07:05 IST)

மீண்டும் தள்ளிவைக்கப்படுகிறதா அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங்?

அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள அஜித் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் இப்போது விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட பணிகளை இயக்குனர் மகிழ் திருமேனி தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கன நட்சத்திர தேர்வு பட்டியலை அவர் முடித்து லைகா தரப்பின் முடிவுக்காக அனுப்பியுள்ளாராம்.

சில நாட்களாக விடாமுயற்சி ஷூட்டிங் ஆகஸ்ட் மாத மத்தியில் தொடங்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது செப்டம்பர் மாதம்தான் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.