திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (07:34 IST)

விடா முயற்சி ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான லேட்டஸ்ட் தகவல்!

அஜித் துணிவு படத்துக்கு பிறகு தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

திரைக்கதை பணிகளை முடித்துள்ள மகிழ் திருமேனி, அடுத்து நடிகர் நடிகைகள் தேர்வில் இப்போது ஈடுபட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.. ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் தற்போது அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

அஜித்தின் துணிவு படம் ரிலீஸாகி பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் அவரின் அடுத்த படம் தொடங்காமல் இருப்பது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.