புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (10:46 IST)

ஜி தமிழுக்கு டாட்டா… விஜய் டிவி நிகழ்ச்சியில் அர்ச்சனா!

நடிகை அர்ச்சனா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காதலா காதலா நிகழ்ச்சியை தொகுத்தி வழங்க உள்ளார்.

விஜய் டிவி மூல்ம பிரபலமான அர்ச்சனா பின்னர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் 6 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளராக பணியாற்றினார். அவரின் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்த்தது. இந்நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

இதையடுத்து அவர் இப்போது காதலர் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள காதலா காதலா எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதனால் அவர் ஜி தமிழ் தொலைக்காட்சியை விட்டு மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கே வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.