செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (20:51 IST)

விஜய் பட நடிகைக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த காதலர்...

கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெளியான படம் பிகில்.இப்படத்தை அட்லி இயக்கினார். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் வசூலில் சாதனை படைத்தது.

இந்நிலையில், இப்படத்தில் அனிதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகைக்கு அவர்து காதலர் எதிர்ப்பாராமல் ஒரு பரிசு கொடுத்துள்ளார்.

பிகிப் படத்தில் அனிதா என்ற கேரக்கடரில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றவர் ரெபா மோனிகா.

இவர் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினர். இவர்   தனது நீண்டகால நண்பரான ஜோய்மோன் என்பவரை நிச்சயம் செய்து கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ரெபா பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவரிடம் தனது காதலைக் கூறியுள்ளார் ஜோய்மோன். உடனே அவரது புரோபொசலை ஏற்றுக்கொண்டார் ரெபா.

இந்த லாக்டவுன் காலத்தில் ரெபாவை சந்திக்கமுடியவில்லை என்றாலும்கூட, சுமார் 6 மாதம் கழித்துத்தான் ரெபாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியதாகவும் சர்ப்பிரைஸ்  தனது சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.