1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (22:03 IST)

பிக்பாஸ் சுசியுடன் இருக்கும் இந்த இளைஞர் யார்? வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் சுசியுடன் இருக்கும் இந்த இளைஞர் யார்? வைரல் புகைப்படம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சுசி அந்த நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் மட்டுமே கலந்து இருந்து மூன்றாவது வாரம் வெளியேறினார் என்பது தெரிந்ததே 
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதும் சரி, வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் சரி சர்ச்சைக்குரிய நபராகவே அவர் கருதப்படுகிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் கமல்ஹாசனின் கதர் நிறுவனம் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை இன்ஸ்டாகிராமில் தெரிவித்து கமல் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இளைஞர் ஒருவர் எடுத்த செல்பி புகைப்படத்தில் தேக்கடி நீரோடையில் சுசி உட்கார்ந்து இருப்பது போலவும் அவருக்கு அருகில் அந்த இளைஞர் உட்கார்ந்து இருப்பது போலவும் உள்ளது
 
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சுசிக்கு அருகில் உட்கார்ந்து இருக்கும் இளைஞர் யார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்