1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (14:42 IST)

சிலை திறப்பிற்கு செல்லாதது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.  இதில் ரஜினி, கமல் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது.
 
நேற்று மாலை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் திட்டவட்டமாக மறுத்து வதந்திகளை நம்பவ வேண்டாம் என முற்றுப்புள்ளி வைத்தார் கமல்ஹாசன். இதையடுத்து கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், சிலை திறப்பு விழாவிற்கு செல்லாததற்கு எந்த ஒரு பகையும் இல்லை. இன்று கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்கிறேன். அதனால் தான் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை.
 
கருணாநிதி மீது எனக்கு அளவுக்கடந்த மரியாதை இருக்கிறது. அதனை யாரிடமும் நிரூபிக்க வேண்டியது இல்லை என கமல்ஹாசன் கூறினார்.