வார இறுதி நாட்களில் வசூல் மழை பொழியும் அரண்மனை 4… மூன்று நாள் வசூல் இவ்வளவா?
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.
இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படம் மே 3 ஆம் தேதி ரிலீஸான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் படத்தின் வசூல் விமர்சனங்களைத் தாண்டி பெரியளவில் உள்ளது. முதல் மூன்று நாட்களில் மட்டும் இந்த படம் உலகளவில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் 50 கோடி ரூபாய் கிளப்பில் விரைவில் இணையும் என சொல்லப்படுகிறது.