திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (17:50 IST)

நிஷாவின் பாட்டுக்கு தாளம் போடும் குட்டி நிஷா - வைரல் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

தற்கிடையில் கடந்த வருடம் நிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. அதையடுத்து இவருக்கு இஸ்லாமிய முறைப்படி சீமந்தம் நடைபெற்றது. பின்னர் கடந்த டிசம்பர் 28ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்து குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டார். அவரது குழந்தையின் பெயர் சூட்டு விழா விஜய் டிவியில் நடைபெற்றது.

சமூக அக்கறையும் , மக்களை மகிழ்விப்பதிலும் தனது முழு நேரத்தை செலவிட்டு வரும் நிஷா தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருந்து ஒருபோதும் சலித்துப்போக மாட்டார். கணவரை கலாய்த்து மாமியார் மாமனாருடன் ஜாலியாக சேட்டை செய்யும் நிஷா தற்போது தனது மகள்  சஃபா ரியாவை தூங்க வைக்க தாலாட்டு பாடம் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு " அதில், என் அம்மாவுக்கு என் தாலாட்டு, தாலாட்ட இன்னிக்கி எல்லாரும் மறந்துட்டாங்க, அத கேட்டு தானா நாம வளர்ந்தோம். கண்டிப்பா எல்லா குழந்தைக்கும் தாலாட்டு பாடுவோம். என் பாட்டுக்கு என் மகள் தாளம் போடுகிறாள். கண்டிப்பா அவளுக்கு உங்க ஆசீர்வாதம் வேண்டும் என கூறி செம கியூட்டான இரண்டு வீடியோகளை  வெளியிட்டுள்ளார். குழந்தை பார்ப்பதற்கு அப்படியே நிஷா போன்றே இருக்கிறாள் என அனைவரும் கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

En padalukku en magal safa Thalam. Kandipa avalukku unga blessing venum.

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

En ammaukku en Thalattu. Thalattu ennaiku neraya per maranthutanga atha kettutananga namma valanthom, kandipa ella baby kum Thalattu paduvom

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on