வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (19:11 IST)

ஏ .ஆர்.ரஹ்மானின் 'மூப்பில்லா தமிழே தாயே' முதலிடம்

ஆஸ்கர் நாயகன்  ஏ .ஆர்.ரஹ்மான் தனது இசையமைப்பில் 
'மூப்பில்லா தமிழே தாயே' என்ற புதிய தனிபாடலை  வெளியிட்டுள்ளார்.


இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பொன்னியின் செல்வன் , கோப்ரா உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தமிழ் கீதமான மூப்பில்லாத தமிழே தாயே என்ற பாடலை  கடனந்த 24 ஆம் தேதி துபாய் எக்ஸ்போவில்  நடைபெற்ற கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இப்பாடல் இப்போது, யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் கலாச்சாரம் , பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் உள்ளது என பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மா ன், சைந்தவி, பிரகாஷ், ஏ.ஆர்.அமீன், அமினா உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இப்பாடல் டிரெண்டிங்கில் முதலிடம்பிடித்து, யூடியூப்பில் 10 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.