வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (16:34 IST)

இந்தியில் பேசியதால்….மேடையை விட்டு கீழிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ ஆர் ரஹ்மான் கதை, திரைக்கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ் படம் ஏப்ரல் 16 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் கதை, திரைக்கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார் ரஹ்மான்.

ஏஹான் பட் மற்றும், எடில்சி வர்கஸ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் லிசியா ரே,மணிசா கொய்ராலா,ராகுல் ராம், ரஞ்சித் பாரோட்  ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் வேண்டிய ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் 99 சாங்ஸ் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.இந்த டிரெயிலர் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியானது.

மேலும், ஏற்கனவே இப்படத்தின் இந்தி வெர்சன் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மற்ற மொழிப் பாடல்கள் விரையில் வெளியாகவுள்ளது.இப்படம் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது.

ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இப்படம் இதில், ரஹ்மான் கதை எழுதி. ஜியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்நிலையில் 99 சாங்ஸ் படத்தில் புரோமோஷன் நேற்று நடைபெற்றது.இதில், செய்தியாளர்களிடம் இப்படத்தின் பாடலாசிரியர்கள்,பங்களித்தவர்களை ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் 99 சாங்ஸ் இசை வெளியீட்டின்போதும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி இந்தியில் பேசினார்,. உடனே இந்திய …என கேட்டபடி சட்டென மேடையை விட்டு கீழே இறங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது