1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. ஹோலி ஸ்பெஷல்
Written By Sasikala

முழுநிலவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்...?

ஹோலி பண்டிகை தமிழ் மாதங்களில் இறுதி மாதமான பங்குனி மாத பெளர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் வரும் முழு நிலவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர்மீது ஒருவர் வண்ணப்பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ பூசி அல்லது எறிந்து கொண்டாடுகின்றனர்.
 
ஹோலி பண்டிகை வரலாறு:
 
துலன்னி என அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்)  எனவும் அழைக்கப்படும்.
 
இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்றபோது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்தார்.
 
ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது தெய்வ பக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். இதன்  நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன.
 
இதன் மூலம் நன்மை, தீமையை வென்றதாக கருதப்படுகிறது. இதன் மூலம் மனதில் உள்ள காமம், க்ரோதம், பேரசை போன்றவற்றை களைந்து, ஆசை மற்றும் தேவை போன்றவைகளை சமச்சீராக எடுத்துக் கொள்ள வழி வகுக்கிறது.