பார்த்திபன் இயக்கும் படத்துக்கு இசையமைக்கும் ரஹ்மான்!
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பார்த்திபன் இசையமைக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதை ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார். இதைக் குறிப்பிட்டு டிவீட் செய்த பார்த்திபன் 3 பாடல்கள் கைவசம் உள்ளதாகவும், இன்னும் ஒரு ப்ரோமோஷன் பாடலுக்கு இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.