வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (17:20 IST)

இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் !

இந்திய சினிமாவின் பொக்கிஷமாகவும் ஹாலிவுட் திரையுலகம் கொண்டாடும் ஆஸ்கர் நாயகனாக வலம்வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவர் தற்போது அந்தராங்கே , கோப்ரா உள்ளிட்ட படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,  உலக அரங்கில் இந்தியக் கலைஞர்களின் திறமைகளைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இந்தியாவின்   பெருமையை மேலும் உயர்த்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.