வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2020 (16:03 IST)

தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை ! நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிமன்றம் லஞ்சத்திற்கு சமூக நிலவரதைக் கவனித்து பல அதிரடியாக கருத்துகளைக் கூறி வருகிறது. அந்தவகையில் தற்போது, தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மக்களுக்குக் குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக் என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபத்கள்,  இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தமிழக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளின் ஊழல் செய்து சம்பாதித்த அவர்களின் மொத்தச் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அவர்கள் தனியே சங்கம் தொடங்க அவர்களுக்கு யார் அதிகார்ம கொடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெரும் ஊழியர்கள் முறையாக தங்களின் பணியைச் செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளனர்.