வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2020 (14:01 IST)

மத்திய அரசின் தந்திரம் புரிந்தவர்கள் விவசாயிகள்! – பேச்சுவார்த்தை நடத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகளோடு பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சாப், ஹரியான விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசுதல், தண்ணீரை பீய்ச்சி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு முயற்சித்து வருகிறது. ஆனாலும் விவசாயிகள் விடாப்பிடியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டுமென்றும், பிரதமர் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட தமிழக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் ” குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்! அவர்களின் உணர்வுகளைப் புரிந்து பிரதமர் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்!” என கேட்டுக்கொண்டுள்ளார்.