வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (16:25 IST)

விமானத்தில் குடும்பத்தோடு செல்ஃபி எடுத்துக்கொண்ட ரஜினி & ஏ ஆர் ரஹ்மான்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது ஆன்மீக தளங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள தர்கா ஒன்றுக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு வழிபாடு செய்தார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

இந்நிலையில் இப்போது தனி விமானத்தில் ரஜினி, ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினி மற்றும் ஏ ஆர் ஆர் அமீன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.