செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 17 மே 2020 (14:10 IST)

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் வழியில் அனுஷ்கா: திரையுலகில் பரபரப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. 5 கோடி முதல் 100 கோடி வரை பட்ஜெட்டில் தயாரான பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் பெட்டிக்குள் முடங்கி இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கு வட்டி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் வேறு வழியின்றி தற்போது ஒரு சில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி வருகின்றன. முதல் கட்டமாக அமேசான் பிரைமில் ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதியும், கீர்த்தி சுரேஷ் நடித்த ’பெங்குவின்’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவான ’நிசப்தம்’ என்ற திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளிலும் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரமாண்டமாக நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர் ஆனால் இப்போதைக்கு இருக்கும் சூழ்நிலையில் திரையரங்குகள் திறக்க இன்னும் மூன்று மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ’நிசப்தம்’ திரைப்படத்தையும் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்
 
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஐந்து மொழிகளிலும் அனுஷ்காவின் ’நிசப்தம்’ படம் ஓடிடியில் வெளியாக உள்ளதால் திரையுலகினரும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது