திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2019 (15:09 IST)

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அனுஷ்கா?

தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா  ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.  


 
இந்தியாவின் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டுவருகிறது. தமிழிலும் கமல் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து சாதித்து வருகின்றனர். 
 
அந்தவகையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவது யார் என்பது தான் தற்போது பெரிய கேள்வியாக இருந்து வந்தது.


 
இந்நிலையில் தற்போது அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடன் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அனுஷ்காவின் தெலுங்கு சினிமா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.