கோலிக்காக அனுஷ்கா ஷர்மா செய்த தியாகம்!!!

Last Modified ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (11:02 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும்  பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017 டிசம்பர் 11ந் தேதி திருமணம் நடைபெற்றது. 
 
படத்தில் படு பிசியாக நடித்துவந்த அனுஷ்கா சமீபகாலமாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டதாக தகவல்கள் உலா வந்தன. இது முற்றிலும் தவறான செய்தி என தெரிய வந்துள்ளது.
 
கோலி அடுத்தடுத்து  ஐபிஎல் மற்றும் உலக கோப்பை போட்டியில் விளையாட உள்ளதால் அவருக்கு துணையாக இருக்கவே அனுஷ்கா சினிமாவை தற்காலிகமான ஒதுக்கிவைத்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரம் மூலம் தெரிய வந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :