செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (12:21 IST)

வாமிகாவின் போட்டோ, வீடியோ... மீடியா நண்பர்களுக்கு அனுஷ்கா செய்தி!

மகளின் போட்டோ மற்றும் வீடியோவை வெளியிடாத பத்திரிகையாளருக்கும், ஊடகங்களுக்கும் மிகவும் அனுஷ்கா சர்மா நன்றி தெரிவித்துள்ளார்.

 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் மகளுக்கு வாமிகா (Vamika) என பெயரிட்டு மகிழ்ந்தனர். விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர் மகளின் முகத்தை வெளியுலகத்திற்கு காட்டாமல் வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் அனுஷ்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில், என் மகளின் போட்டோ மற்றும் வீடியோவை இதுவரை வெளியிடாத பத்திரிகையாளருக்கும், ஊடகங்களுக்கும் மிகவும் நன்றி. எங்கள் மகளை விளம்பர வெளிச்சம் படாமல் வளர்க்க நினைக்கிறோம். அவள் நன்கு வளர்ந்த பிறகு தன் விருப்பத்துக்குரியதை சுயமாக தேர்வு அவள் செய்யட்டும். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். 
 
கடந்த வாரம் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்காக மும்பை விமான நிலையம் சென்ற கோலி அவருடன் தனது மனைவி மகளை அழைத்துச் சென்றார். அப்போது பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்திருக்ககூடும். இதை குறிப்பிட்டு அனுஷ்கா இந்த பதிவை போட்டுள்ளார் என தெரிகிறது.