திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:47 IST)

மீண்டும் பத்திரிக்கையாளர்களிடம் கோபத்தைக் காட்டிய டாப்ஸி!

நடிகை டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான டோபாரா திரைப்படம் வசூலில் தோல்வி அடைந்தது.

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான டோபாரோ என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியானது. வட இந்திய மாநிலங்களில் சில பாலிவுட் படங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் பாய்காட் ஹேஷ்டேக் இந்த படத்துக்கும் பரப்பப்பட்டது. அதனால் படம் படுதோல்வி அடைந்ததாக சொல்லப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் டாப்ஸியிடம் கேட்கப்பட்ட போது “எந்த படத்துக்கு பாய்காட் ட்ரண்ட் உருவாகவில்லை. ஹோம்வொர்க் செய்துவிட்டு வந்து கேள்வி கேளுங்கள்” என பத்திரிக்கையாளரிடம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.