அல்லு அர்ஜுன் படத்தின் இந்தி ரிலீஸ் நிறுத்தம்… காரணம் இதுதானாம்!
அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லூ திரைப்படம் இந்தியில் டப் ஆகி ரிலிஸ் ஆக இருந்தது.
டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 300 கோடிக்கும் மேலாக திரையரங்கு மூலமாகவே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தென்னிந்தியா மட்டும் இல்லாமல் வட இந்தியாவிலும் இந்த படம் வட இந்திய நடிகர்களின் படத்துக்கு இணையாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தியில் இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அல்லு அர்ஜுனின் பழைய வெற்றி படங்கள் இப்போது இந்தியில் டப் ஆகி வருகின்றன. அதில் முதலாவது படமாக அலா வைகுந்தபுரம்லூ படத்தை ஜனவரி 26 ஆம் தேதி இந்தியில் டப் செய்து வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் அலா வைகுந்தபுரம்லூ திரைப்படம் ஏற்கனவே இந்தியில் ஷெஸாடா என்ற பெயர் ரோஹித் தவான் நடிப்பில் ரீமேக் செய்து வருகின்றனர். அதனால் இந்த டப் வெர்ஷன் வெளியானால் தங்கள் படத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஷெஸாடா படக்குழு கேட்டுக்கொண்டதை அடுத்து அலாவைகுந்தபுரம்லூ ரிலிஸ் நிறுத்தப்பட்டுள்ளது.