வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (17:49 IST)

தமிழ் சினிமா வரலாற்றிலேயே திங்கள் கிழமை ரிலீஸ் ஆகும் படம்!

வழக்கமாக தமிழ் சினிமாக்கள் வெள்ளிக் கிழமையில்தான் ரிலீஸ் ஆகும். பண்டிகை காலங்களில் மட்டும் விதிவிலக்காக மற்ற நாட்களில் வெளியாகும்.

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ’ஆண்டி இந்தியன்’ என்ற திரைப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறியதாக வெளியில் தகவல் வெளிவந்துள்ளது. ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் நரேன், ராதாரவி உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆண்டி இந்தியன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் சட்டப்போராட்டம் நடத்தி சான்றிதழ் பெற்றார்.

இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. டிசம்பர் 6 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக வார இறுதியில்தான் படங்கள் ரிலிஸ் ஆகும். ஆனால் திங்கள் கிழமையில் ரிலீஸ் செய்யும் படக்குழுவினரின் முயற்சி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.