1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 16 அக்டோபர் 2021 (11:46 IST)

அண்ணாத்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
 
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் யூஏ சான்றிதழுடன் அட்டகாசமான போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார்.