திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (14:32 IST)

மீண்டும் ஒரு மிட்வீக் எவிக்சன்.. தகர்ந்தது டைட்டில் வின்னர் கனவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தான் இறுதி வாரம் என்ற நிலையில் இந்த வாரத்தில் மிட் வீக் எவிக்சனாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் ஒரு மிட் வீக் எவிக்சன் இன்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்தான் இறுதிப் போட்டிக்கு முதலில் தகுதி பெற்ற விஷ்ணு என்று கூறப்படுகிறது.
 
 பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே. இறுதிப்போட்டிக்கு விஷ்ணு ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் மாயா, தினேஷ், மணி  மற்றும் அர்ச்சனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் 
 
இவர்களில் ஒருவருக்கு  டைட்டில் பட்டம் கிடைக்கும் என்றும், தற்போது கிடைத்துள்ள வாக்குகள் எண்ணிக்கையின் படி அர்ச்சனாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் இரண்டாவதாக மாயா, மூன்றாவதாக மணிக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திடீரென மிட் வீக் எவிக்சனாக விஷ்ணு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த காட்சிகள் என்று இன்றைய எபிசோடில் வரும் என்று கூறப்படுவதால் விஷ்ணுவின் டைட்டில் கனவு தகர்ந்ததாக தெரிகிறது.
 
Edited by Mahendran