வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (14:23 IST)

இன்னொரு மிட்வீக் எலிமினேஷனா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் வீட்டில் நேற்று திடீரென மிட் வீக் எலிமினேஷன் நடைபெற்றது என்பதும் இதில் விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று அல்லது நாளை இன்னொரு மிட்வீக் எலிமினேஷன் நடைபெறும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் மாயா, அர்ச்சனா, விஷ்ணு ,தினேஷ், மற்றும்  மணி  ஆகிய ஐந்து பேர்கள் உள்ளனர்

இந்த நிலையில் நேற்று விஜய் வர்மா திடீரென எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இன்று அல்லது நாளை இன்னொரு எலிமினேஷன் செய்யப்பட உள்ளதாக கூறப்படுவது. விஷ்ணு டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வென்றுள்ளதை அடுத்து அவரை தவிர மீதம் உள்ள நான்கு பேர்களில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கான வாக்குகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில் அர்ச்சனா கிட்டத்தட்ட 40% மேல் ஓட்டு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் வெளியேற வாய்ப்பில்லை என்றும் மாயா தினேஷ் மற்றும் மணி ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva