வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 28 டிசம்பர் 2019 (18:17 IST)

இவரின் வாழ்க்கைதான் ஹீரோ படம் – இயக்குனர் மித்ரன் மேல் மற்றுமொரு குற்றச்சாட்டு !

ஹீரோ திரைப்படத்தில் அர்ஜுன் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் பேராசிரியரான அனில் குப்தா என்பவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கி கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படம் ஹீரோ. இந்தப் படத்தில் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை முறைகேடாக தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் வில்லனுக்கு எதிராக மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கல்வியியல் ஆர்வலராக அர்ஜுன் நடித்திருந்தார்.

இந்நிலையில் திரையில் அர்ஜுன் ஏற்று நடித்த கதாபாத்திரம் நிஜத்தில் ஐஐஎம் - அகமதாபாத் பேராசிரியாக பணிபுரியும் அனில் குப்தா என்பவருடையது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்,தேசிய கண்டுபிடிப்புக் கழகத்தின் முதன்மைச் செயலாளராக இருந்து கிராமப்புற மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அரசிடம் இருந்து காப்புரிமை வாங்கி தந்து அவர்களை ஊக்குவிப்பவர்.

இவரின் வாழ்க்கையை ஒட்டிதான் ஹீரோ படத்தில் அர்ஜுன் கதாபாத்திரம் அமைக்கபப்ட்டுள்ளது. அவரைப் பற்றியும் அவரது பணிகள் குறித்தும் இயக்குனர் மித்ரன், தன்னிடம் எல்லா விவரங்களையும் பெற்றுக்கொண்டதாக சிவராஜ் என்பவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். ஆனால் அனில் குப்தாவுக்கு படத்தில் எந்தவொரு இடத்திலும் கிரெடிட்ஸ் கொடுக்கப்படவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். உயிருடன் இருப்பவர்களின் வாழ்க்கை பற்றி படம் எடுக்கும் போது அவர்களிடம் அனுமதி வாங்கி எடுப்பதுதான் வழக்கம்.

ஏற்கனவே ஹீரோ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குனர் அட்லியின் உதவியாளர் போஸ்கோ பிரபு என்பவர் புகார் செய்தது குறிப்பிடத்தகக்து.