கடுமையான நிபந்தனை விதித்தும் முன்னணி ஹீரோக்கள் வாய் திறக்காதது ஏன்? அதிர்ச்சித் தகவல்
நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் கூடி 2 முக்கிய நிபந்தனைகளை விதித்தது. இதன்படி உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் தோல்வி அடைந்தால் அந்த திரைப்படத்தின் தோல்விக்கான பொறுப்பை உச்ச நட்சத்திரங்கள் ஏற்றுக்கொண்டு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும், அந்த நஷ்ட ஈடு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பதிந்து கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது
இந்த முடிவு குறித்து நேற்று அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்ததோடு, இதுகுறித்து ஒரு சில செய்தி ஊடகங்களில் விவாதமும் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த நிபந்தனை குறித்து முன்னணி ஹீரோக்கள் கருத்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு ஹீரோ கூட இது குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தங்களுடைய அடி மடியில் கை வைக்கும் இந்த நிபந்தனைக்கு எந்த ஹீரோவும் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் இருப்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது. இருப்பினும் ஒரு படத்தின் தோல்வி என்பது அந்த நடிகரை மட்டும் சார்ந்தது அல்ல, இயக்குனர் மற்றும் டெக்னீசியன்களும் காரணம் என்றும், எனவே ஒட்டுமொத்த தோல்வியின் பொறுப்பை நடிகரையே ஏற்றுக் கொள்ளச் சொல்வது சரியில்லை என்றும் நடுநிலையாளர்கள் கூறி வருகின்றனர்
அதேபோல் ஒரு படம் தோல்வி அடைந்தால் அந்த படத்திற்கு பொறுப்பேற்று ஹீரோ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பது போல், அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தால் அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை ஹீரோவுக்கு தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது