செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (09:29 IST)

கொரோனாவால் மேலும் ஒரு தமிழ் நடிகர் பலி…. அதிர்ச்சியில் திரையுலகம்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ் நடிகர் ஃப்ளோரன்ட் சி. பெரேரா உயிரிழந்துள்ளனர்.

கொரோனா காரணமாக பல சினிமா நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளனர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில நடிகர்கள் உயிர் இழந்தும் உள்ளனர். அந்த வகையில் தமிழ் நடிகரான ஃப்ளோரன்ட் சி. பெரேரா கொரோனாவால் பலியாகியுள்ளார்.

கயல் படத்தின் ஜமீந்தாராக நடித்து கவனத்தை ஈர்த்த அவர் அதன் பின் பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.