செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:44 IST)

என் அப்பா எப்பவுமே கிங்... அவரை கிங்காக பார்க்க ஆசை - விஜயகாந்த் மகன்

தமிழக அரசியல் களத்தில் 10 ஆண்டுகளுக்குன் மேலாக இருப்பவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால் ஒரு நடிகராகவும், தமிழ் திரைப்பட நடிகர் சங்க தலைவராக அவரது ஆளுமை என்பது எல்லோருக்கும் தெரியும்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நடிகர்கள் அரசியலுக்கு வரத் தயங்கியபோது, விஜயகாந்த் வலுவாகக் கால் பதித்தார். குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சித் தலைவரானார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவின் காரணமாக ஓய்வில் இருக்கும் விஜயகாந்த அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு கட்சியை வழிநடட்க்ஹ்தி வருகிறார். இந்நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், தேமுதிகவின் 16ஆம் ஆண்டு விழாயையொட்டி இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது: என் அப்பா எப்போதும் கிங் தான் அவர்  கிங்காகா இருப்பதைப் பார்க்கவே எனக்கு ஆசை. இளைஞர்கள் தேமுதிகவில் இணைந்துள்ளனர். கட்சியின் செயர்குழு கூடிதான் வரும் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை உறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.