வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (14:46 IST)

அண்ணாத்த ஷூட்டிங்கில் பலருக்கு கொரோனா! – படப்பிடிப்பு நிறுத்தம்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் ஊழியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. ரஜினிகாந்த் ஜனவரி முதல் அரசியலில் ஈடுபட உள்ளதால் இந்த படத்தை அதற்குள் முடிக்க அவசரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் பணிபுரியும் 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை புறப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.