ஆறு மணிக்கு அதிரடியாக வருகிறார் அண்ணாத்த! – வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்!

Annaththa
Prasanth Karthick| Last Modified வியாழன், 14 அக்டோபர் 2021 (11:07 IST)
ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துள்ள நிலையில் ஆயுதபூஜையான இன்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :