1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (18:17 IST)

'அண்ணாத்த' பட 2 வது சிங்கில் ரிலீஸ்... இணையதளத்தில் வைரல்

ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தின் #AnnaattheSecondSingle இரண்டாவது பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது.
 
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி பாடிய ஓப்பனிங் சாங் வெளியாகி ட்ரெண்டாகில் உள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைத்து பாடியுள்ள #SaaraKaattrae சாரக்காற்றே என்ற பாடல் தற்போது சன் டிவியின் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்பாடல் மெலடியாக அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.