செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 10 ஜூலை 2018 (11:22 IST)

அண்ணணுக்கு ஜே படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ் - மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `அண்ணனுக்கு ஜே' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.. 
`அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `உள்குத்து' படம். இந்நிலையில் அடுத்ததாக  `அண்ணனுக்கு ஜே' என்ற படம் உருவாகி உள்ளது.
 
ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம்  வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
 
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு  விஷ்ணு ரங்கசாமி. விரைவில் படத்தின் இசை வெளியீடு நடைப்பெற உள்ளது. தினேஷ் தற்போது `களவாணி மாப்பிள்ளை', `பல்லு படாம பாத்துக்கோ'  உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.