ஷூட்டிங்கில் விபத்து : பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் படுகாயம்
ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில், பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் படுகாயம் அடைந்தார்.
மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றியவர் தினேஷ். இவர் தற்போது ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கிவரும் இந்தப் படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், முக்கியமான சண்டைக் காட்சியின்போது எதிர்பாராதவிதமாக தினேஷ் படுகாயம் அடைந்தார். ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதோடு, இன்னொரு காலில் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியுள்ளதாம். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.