அஞ்சலியின் 'லிசா' படம் பார்க்க சிறுவர்களுக்கு கட்டுப்பாடு
இந்தியாவின் முதல் ஸ்டீரீயோஸ்கோப் திகில் படமாக உருவாகிவுள்ள 'லிசா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'லிசா' படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படத்தை சிறுவர்கள் தனியாக பார்க்க முடியாது என்பதும் பெற்றோர் அல்லது உறவினர்கள் துணை இருந்தால் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிஜி முத்தையா தயாரிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஞ்சலி, யோகிபாபு, சாம் ஜோன்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். முத்தையா ஒளிப்பதிவில் சந்தோஷ் தயாநிதி இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் 3D டெக்னாலஜியில் உருவாகியுள்ளது என்பதும் மேலும் ரஜினியின் '2.0' படம் போலவே இந்த படம் 3D கேமிராவில் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.